வழியில் வந்த பாம்பை கடவுள் அனுப்பியதாக கூறி பெண் செய்த காரியம்! அடுத்து நடந்த துயரம்
ஜார்க்கண்ட் மாநிலம் பாட்னா அருகே கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற பெண், பாம்பை கழுத்தில் மாலையாகச் சுற்றியதில் பாம்பு கடித்து உயிரிழந்துள்ளார்.
கோவிலுக்கு சாமி கும்பிட வீட்டிலிருந்து புறப்பட்ட ருனியா தேவி, வழியில் பாம்பு ஒன்றினை பார்த்து, கடவுள் அனுப்பிய தூதர் என்று நினைத்துக்கொண்டதோடு, பாம்பிற்கு தீப ஆராதனை செய்து, தனது கழுத்திலும் சுற்றிக் கொண்டுள்ளார்.

இதனை அவதானித்த அக்கம் பக்கத்தினரும் பக்தி பரவசத்தோடு, பூஜைகளை நடத்தி மகிழ்ந்துள்ளனர். இவ்வாறு பக்தியில் ஆடிக்கொண்டிருக்கும் போதும் குறித்த பாம்பு ருனியாவைக் கொத்தியுள்ளது.
விஷம் உடல் முழுவதும் பரவி மயங்கிவிழுந்த நிலையில், ருனியாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் மந்திரவாதியிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆனால் குறித்த மந்திரவாதியும் கிராமத்தில் இல்லாததால் ருனியா தேவி உயிரிழந்தார்.
ருனியாவை பரிசோதித்த மருத்துவர்கள் உடனே கொண்டு வந்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.