நான் கொஞ்சம் கருப்புதான் : தன்னை தானே கருப்பாக மாற்றிக்கொண்ட யூடியூபர் காரணம் என்ன?
ஜப்பானை சேர்ந்த ஹஜீம் என்ற யூடியூபர் ஒருவர் தன்னை முழுவதுமாக கருப்பு நிறத்தில் மாற்றிக்கொண்டுள்ள செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
வான்டாபிளாக் என்ற பெயின்ட் உலகின் மிக கருப்பான பெயின்ட் என அறியப்படுவதாக டைம்ஸ் நவ் தளம் தெரிவிக்கிறது. இது புலப்படும் ஒளியில் 99.965 சதவீதம் வரை உள்வாங்கிக்கொள்ளும் திறன் கொண்டது.
கருப்பு பெயின்ட்
விலையுயர்ந்த இந்த பெயின்ட், அவ்வளவு எளிதில் கிடைக்கும் பொருள் அல்ல. இந்த வான்டா பிளாக்குக்கு அடுத்ததாக இரண்டாவது கருப்பான பெயிண்ட் என கூறப்படும் நிலையில் ஜப்பானின் கோயோ ஒரியன்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த பெயின்ட் 99.4 சதவிகிதம் வெளிச்சத்தை உள்வாங்கிக்கொள்ளும். இந்த வகை பெயின்ட் அமேசானில் விற்பனையில் உள்ளது

மக்களை ஈர்க்க பெயின்ட்
இந்த நிலையில் ஹஜீம் வான்டாபிளாக் பெயின்ட்டை பயன்படுத்தி, உலகின் கருப்பான மனிதனாக மாறியுள்ளார்.
முதலில் இந்த மசோ பெயின்ட்டை பயன்படுத்தி தனது அறைக்கு நிறம் மாற்றியவர், பின்னர் தன் மீதும் பூசிக்கொண்டுள்ளார்.கருப்பு பெயிண்ட்-ஐ தனது உடல் முழுவதும் பூசி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் .