உணவகத்தின் அறிவிப்பு பலகையால் வெடித்த சர்ச்சை - கொதித்தெழுந்த மக்கள்
உணவகத்தின் அறிவிப்பு பலகை சர்ச்சையை கிளப்பியுள்ளது.
உணவக அறிவிப்பு
ஜப்பான், ஒசாகாவில் ஹயாஷின் (Hayashin) என்று பெயரிடப்பட்ட யாகிடோரி உணவகம், சீன வாடிக்கையாளர்கள் "முரட்டுத்தனமாக" இருப்பதால் அவர்களை தடை செய்யும் அறிவிப்பை கதவில் ஒட்டியுள்ளது.
இந்த அறிவிப்பு சோஷியல் மீடியா மூலம் வைரலானதால் சர்ச்சையாக வெடித்துள்ளது. சீன மொழியில் எழுதப்பட்டிருந்த அந்த நோட்டீஸில் " சீன வாடிக்கையாளர் பலர் முரட்டுத்தனமாக இருப்பதால்"
வெடித்த சர்ச்சை
எங்கள் அவுட்லெட்டில் சீன வாடிக்கையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஜப்பான் மற்றும் சீனா ஆகிய 2 நாடுகளிலும் சோஷியல் மீடியாக்களில் பெரும் விவாதத்தை தூண்டியுள்ளது.
இதேபோல் டோக்கியோவில் இருக்கும் மற்றொரு உணவகம், கடந்த ஜூலை மாதம் சீன மற்றும் தென்கொரிய வாடிக்கையாளர்களை தடைசெய்ததாக சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.