மிரட்டும் யுத்தம் : உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கும் ஜப்பானியர்கள்
உக்ரைனுக்கு ஆதரவாக ஜப்பானியர்கள் போரில் களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 7-வது நாளாக நடத்தி வருகிறது.
உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
உக்ரைன் நாட்டின் கர்சன் நகரை முழுமையாக கைப்பற்றி விட்டதாக ரஷ்ய ராணுவ அமைச்சகம் அறிவிப்பு உக்ரைன் நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த நகரம் கப்பல் கட்டும் தொழிற்சாலைகளும் கருங்கடலை ஒட்டி முக்கியமான துறைமுகங்களும் அமைந்துள்ள முக்கியமான நகரமாகும்.
கடந்த சில மணி நேரங்களுகு முன்பு ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் கார்கிவ் நகரிலுள்ள காவல்துறை அலுவலம் தீக்கு இரையானது. உக்ரைனுடன் 2-கட்ட பேச்சுவார்த்தை தொடங்கவுள்ள போதிலும் ரஷ்யா தனது ஏவுகணை தாக்குதலை தொடர்ந்துள்ளது.

3 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த மண்டலத்தில் 20% பேர் ரஷ்ய நாட்டினார். கப்பல் கட்டும் தொழிற்சாலைகள், துறைமுகங்கள் நிறைந்த முக்கிய நகரமாக கெர்சன் பார்க்கப்படுகிறது. உக்ரைனில் நோவா, ககோவ்கா உள்பட இரு நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் மூன்றாம் உலகப்போர் மிகுந்த அழிவை ஏற்படுத்தும் என ரஷ்ய வெளியறவுதுறை அமைச்சர் தெரிவித்துள்ளார். உக்ரைனுடன் பேச்சு வார்த்தை நடத்த அமெரிக்கா தடுப்பதகாவும் , ரஷ்யா தனிமைபடுத்தப்படவில்லை எங்களுக்கும் ஏராளமான நண்பர்கள் இருக்கிறார்கள் என ரஷ்யா அறிவித்துள்ளது.
உக்ரைனில் நடைபெற்று வரும் போருக்கு பல்வேறு உலக நாடுகள் தங்கள் ஆதரவினை தெரிவித்து வரும் நிலையில் ஜப்பானை சேர்ந்த 70 பேர் உக்ரனைக்கு ஆதரவாக களம் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.