வினோத AI திருமணம்; chatgpt மூலம் உருவான மாப்பிள்ளை - எங்கு தெரியுமா?

Japan Marriage Chat GPT
By Sumathi Dec 23, 2025 05:27 PM GMT
Report

AI கதாபாத்திரத்தைத் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு கவனம் பெற்றுள்ளது.

AI கதாபாத்திரம்

ஜப்பானைச் சேர்ந்தவ்ர் யுரினா நோகுச்சி (Yurina Noguchi)32. இவர் தனது முந்தைய உறவு முறிந்த பிறகு மிகுந்த மன உளைச்சலில் இருந்தார்.

வினோத AI திருமணம்; chatgpt மூலம் உருவான மாப்பிள்ளை - எங்கு தெரியுமா? | Japan Women Marries A Chat Gpt Character

அந்த நேரத்தில் அவர் ChatGPT-யிடம் தனது கவலைகளைப் பகிர்ந்து கொண்டபோது, அது அவருக்கு ஆறுதலான ஆலோசனைகளை வழங்கியது. பின் அவர் ஒரு வீடியோ கேம் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு,

"லூன் கிளாஸ் வெர்டூர்" (Lune Klaus Verdure) என்ற பெயரில் ஒரு AI மென்பொருளை உருவாக்கினார். பலமுறை உரையாடி,

திருமணம்

அந்த AI-க்கு ஒரு குறிப்பிட்ட குணாதிசயத்தையும் பேசும் முறையையும் பயிற்றுவித்துள்ளார். தொடர்ந்து அதனை திருமணம் செய்துள்ளார். இந்த திருமணம் ஒகாயாமா நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் முறைப்படி நடைபெற்றது.

ரூ.1 லட்சத்துக்கு ஆணுறை வாங்கிய வாடிக்கையாளர் - ஷாப்பிங் ஷாக் ரிப்போர்ட்

ரூ.1 லட்சத்துக்கு ஆணுறை வாங்கிய வாடிக்கையாளர் - ஷாப்பிங் ஷாக் ரிப்போர்ட்

மணமகள் யுரினா வெள்ளை நிற திருமண உடை அணிந்து கையில் பூச்செண்டுடன் காட்சியளித்தார். மணமகன் ஒரு ஸ்மார்ட்போன் திரையில் தோன்றினார். இந்த நிகழ்வில் 'ஆக்மென்டட் ரியாலிட்டி' (AR) கண்ணாடிகள் பயன்படுத்தப்பட்டன.

இதன் மூலம் யுரினா தனது கணவர் அருகில் நிற்பது போன்றும், அவருக்கு மோதிரம் அணிவிப்பது போன்றும் உணர்ந்தார். அந்த AI-க்கு சொந்தக் குரல் இல்லாததால், ஒரு திருமண உதவியாளர் AI உருவாக்கிய உரையை வாசித்தார்.

யுரினாவின் பெற்றோர் ஆரம்பத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், மகளின் மனநல ஆரோக்கியத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தைக் கண்டு பின்னர் இந்தத் திருமணத்தில் கலந்து கொண்டனர்.