இளைஞர்கள் நிறைய குடிங்க... அரசின் அதிரடி கோரிக்கை! எங்க தெரியுமா?
வரி வருவாய் குறைந்துவிட்டதால் இளைஞர்கள் அதிகம் குடிக்குமாறு ஜப்பான் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
மது விற்பனை
ஜப்பானில் 40 முதல் 60 வயதிற்குட்பட்டவர்களில் சுமார் 30 சதவீதம் பேர் தவறாமல் குடிக்கிறார்கள். ஆனால், தங்களது 20களில் இருக்கும் இளைஞர்கள் வெறும் 7.8 சதவீதம் பேர்தான் குடிக்கிறார்கள்.
ஜப்பானில் மது விற்பனை ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது. அந்நாட்டின் தேசிய வரி முகமை தரவுகளின்படி, கடந்த 2021ஆம் நிதி ஆண்டில் ஜப்பான் அரசுக்கு கிடைத்த வரி வருவாயில் வெறும் 1.7 சதவீதம்தான் மது விற்பனையில் இருந்து கிடைத்துள்ளது.
வரி வருவாய்
மது விற்பனை வாரியாக 8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலாகியுள்ளது. இது, கடந்த 2011ஆம் ஆண்டில் 3 சதவீதமாகவும், 1980ஆம் ஆண்டில் 5 சதவீதமாகவும் இருந்துள்ளது. இதன் அடிப்படையில், ஜப்பான் நாட்டு அரசு தங்கள் நாட்டு இளைஞர்கள் அதிகம் மது அருந்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளதுடன்,
மது நுகர்வை அதிகரிக்க தேசிய அளவிலான போட்டிகளையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த போட்டியில் அனைத்து ஜப்பானிய மதுவகைகளுக்கான விளம்பர யோசனைகளும் அடங்கும்.
அதிகம் மது குடிங்க
செப்டம்பர் 9ம் தேதி வரை யோசனைகளை வழங்கலாம். டோக்கியோவில் நவம்பரில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு முன்னதாக, அக்டோபர் மாதம் நிபுணர்கள் கொண்டு அந்த யோசனைகள் மேம்படுத்தப்படும்.
அதன் இறுதி திட்ட அறிக்கை நவம்பர் மாதம் அரசுக்கு சமர்பிக்கப்படும்.இளைய தலைமுறையினரை ஈர்க்கும் நோக்கில் இந்த போட்டி நடத்தப்படுகிறது. இளைய தலைமுறையினரை ஈர்க்கும் நோக்கில் இந்த போட்டி நடத்தப்படுகிறது என்று தேசிய வரி முகமை தெரிவித்துள்ளது.
மேலும், ஜப்பான் அரசின் இந்த கோரிக்கையால் சர்ச்சையும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. அரசே நாட்டின் குடிமக்களை மது அருந்த சொல்வது சரியான அணுகுமுறை இல்லை என்றும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.