ஜப்பான் பிரதமர் முதன்முறையாக இந்தியா பயணம் : 42 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் ஜப்பான்

japanpm kishida indiavist
By Irumporai Mar 19, 2022 11:23 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா 2 நாள் பயணமாக இந்தியா வந்தடைந்தார். டெல்லி வந்த கிஷிடாவிற்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். ஜப்பான் பிரதமராக பொறுப்பேற்று முதன்முறையாக கிஷிடா இந்தியா பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், இந்தியா – ஜப்பான் இடையே இன்று மாலை நடைபெறும் இருதரப்பு மாநாட்டில் கிஷிடா பங்கேற்கிறார்.

ஜப்பான் இந்தியாவின் 5 வது பெரிய அன்னிய முதலீட்டு ஆதாரமாகவும் உள்ளது, நாட்டின் மிகப்பெரிய வளர்ச்சிக்கும் முக்கியமான பங்களிப்பை அளித்துள்ளது.

மேலும் மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் பாதை, பிரத்யேக சரக்கு வழித்தடம், மெட்ரோ திட்டங்கள் மற்றும் டெல்லி-மும்பை தொழில்துறை தாழ்வாரத் திட்டம் உட்பட ஜப்பானின் உதவியுடன் பல உள்கட்டமைப்புத் திட்டங்கள் தற்போது இந்தியாவில் இயங்கி வருகிறது.

இந்தியா - ஜப்பான் இடையே நீண்ட காலமாக வர்த்தகம் மற்றும் நடப்புறவு இருக்கும் நிலையில் ஃபுமியோ கிஷிடா சிறப்பாக்க மிகப் பெரிய முதலீட்டுத் திட்டத்தை அறிவிக்க உள்ளதாகத் தெரிகிறது.