காதல் ஒரு ஆகாயம் .. சுனாமியில் காணமல் போன மனைவியை 11 ஆண்டுகளாக தேடும் கணவர்
ஜப்பானில் சுனாமியில் சிக்கி மாயமான மனைவியை அவரது கணவர் 11வது ஆண்டாக கடலில் தேடி வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜப்பானில் வந்த சுனாமி
ஜப்பானில் கடந்த 2011 மார்ச் 11ம் தேதி கடலுக்கடியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சுமார் 6 நிமிடங்கள் வரை நீடித்தது.
ஜப்பானில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் இதுவாகும். அதோடு 1900 காலக்கட்டம் முதல் உலகளவில் பதிவான மிகப்பெரிய 4வது நிலநடுக்கம் இதுவாகும். இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து கடலில் திடீரென்று சுனாமி ஏற்பட்டது. இந்த சம்பவம் அந்த காலத்தில் உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சனாமியில் காணமல் போன மனைவி
ஜப்பானின் ஒனகோவா பகுதியில் வசித்து வந்த யூகே தகாமட்சு என்ற பெண் மாயமானர். இவரது கணவர் யசுவோ தகமாட்சு அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். மனைவி மாயமான நிலையில் பேரிடர் மீட்பு படையினருடன் சேர்ந்து யசுவோ தனது மனைவியை தீவிரமாக தேடினார்.
அனைத்து கடற்கரை பகுதியிலும் தீவிரமாக தேடினார். ஆனால் எங்கு தேடியும் அவரது மனைவி கிடைக்கவில்லை. மேலும் அவரது நிலைமை என்ன என்பது பற்றியும் தெரியவில்லை.

இருப்பினும் துக்க சம்பவம் நடந்து 11 ஆண்டுகள் ஆன நிலையில் மனைவி யூகே தகாமட்சு இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
தான் மனைவி யூகேவின் உடலை கண்டுப்பிடிக்க வேண்டும் என அவரது கணவரான 65 வயது நிரம்பிய யசுவோ முயன்று வருகிறார். சுனாமி அலை வந்த 2011 முதல் தற்போது வரை யசுவோ தனது மனைவியின் உடலை கடலில் தேடி வருகிறார். அதாவது நேரம் கிடைக்கும் போதெல்லாம் யசுவோ கடலில் குதித்து தனது மனைவியை 11 ஆண்டுகளாக தேடி வருகிறார்.
11 ஆண்டுகளாக தேடும் கணவர்
உரிய பாதுகாப்பு உடைகள் அணிந்து அவர் நடுக்கடலில் கூட குதித்து மனைவியின் உடலை தேடிவரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் அவருக்கு இன்னும் அவரது மனைவியின் உடல் கிடைக்கவில்லை.
மனைவி யூகேவின் உடல் கிடைக்கும் வாய்ப்பு என்பது மிகமிக குறைவு என்ற போதிலும் கூட யசுவோ தனது முயற்சியை கைவிடாமல் மனைவியை தொடர்ந்து தேடி வருகிறார். இந்த சம்பவ்சம் ஜப்பானில் சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.