ஓடும் ரயிலில் புகுந்த சைகோ ஜோக்கர் - அலறி அடித்து ஓடிய பயணிகள்: பதைபதைக்கும் வீடியோ!

Japan joker murder attack
By Anupriyamkumaresan Nov 01, 2021 10:49 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in சீனா
Report

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜோக்கர் வேடம் அணிந்து வந்த நபர் நடத்திய கொடூர தாக்குதலில் 17 பேர் காயம் அடைந்துள்ளனர்.

ஜப்பான் நாட்டிலுள்ள சின்ஜூகு ரயில் நிலையம் நோக்கி சென்ற ரயிலில் உள்ள பயணிகளிடம் ஜோக்கர் வேடம் அணிந்த ஒருவர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டார்.

ஓடும் ரயிலில் புகுந்த சைகோ ஜோக்கர் - அலறி அடித்து ஓடிய பயணிகள்: பதைபதைக்கும் வீடியோ! | Japan Joker Murder Attack With Passengers

பயணிகளை கத்தியால் குத்தியதாகவும், பயணிகள் மீது ஆசிட் வீசியதாகவும் கூறப்படுகிறது. அவன் கையில் வைத்திருந்த சிறிய அளவிலான குண்டை வீசி ரயிலை தீ பிடித்த வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த பயணிகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தும் ரயில் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும் வெளியேறினர். சம்பவத்தில் ஈடுபட்ட ஜோக்கர் சைக்கோவை கைது செய்த போலீசார் அவனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓடும் ரயிலில் புகுந்த சைகோ ஜோக்கர் - அலறி அடித்து ஓடிய பயணிகள்: பதைபதைக்கும் வீடியோ! | Japan Joker Murder Attack With Passengers

இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் கவலைகிடமாக உள்ளதாகவும், 17 பேர் படுகாயமடைந்து சிகிச்சையில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கொலைகார சைக்கோ ஜோக்கர் ஜெயிலுக்கு செல்வதற்காக இது போன்ற சம்பவத்தில் ஈடுப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.