ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மக்கள் பீதி

earthquake japan Fukushima tsunamiwarning
By Petchi Avudaiappan Mar 16, 2022 10:09 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

ஜப்பானின் டோக்யோ அருகே 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து வடகிழக்கில் 297 கி.மீ. தொலைவில் புகுஷிமா நகரின் கடற்கரை பகுதி அருகே நேற்று இரவு இந்திய நேரப்படி இரவு 11.36 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.  கடலுக்கு அடியில் 60 கி.மீ ஆழத்தில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவானது.  

கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு  இதே மாதத்தில் ஜப்பானின் ஃபுகுஷிமா பகுதியில் 9.0 ரிக்டர் அளவிலான வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டு அதன் தொடர்சியாக சுனாமியும் தாக்கியது. இதனால் ஃபுகுஷிமா அணுஉலை பாதிக்கப்பட்டு ஜப்பான் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்ததை உலக மக்கள் அனைவருமே மறந்திருக்க மாட்டார்கள்.

இதே மாதத்தில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் மியாகி, ஃபுகுஷிமா மாகாணங்களில் 3 மீட்டர் அளவுக்கு சுனாமி பாதிப்பு ஏற்படலாம் என்று ஜப்பான் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்த நிலநடுக்கத்தால் அங்கு 20 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.