ஒரே நாளில் பள்ளி படிப்பை முடிக்கலாம்.. அதுவும் சான்றிதழோடு - அரசு சூப்பர் அறிவிப்பு!

Japan World School Children
By Swetha Dec 14, 2024 07:00 AM GMT
Report

ஒரே நாளில் பள்ளி படிப்பை முடித்து சான்றிதழ் பெற்றுக்கொள்ளும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.

பள்ளி 

நம்மில பலருக்கு மிகவும் பிடித்தமான பருவமாக பள்ளி பருவம்தான் இருக்கும். அப்படிப்பட்ட சந்தோஷமான வாழ்க்கையை மீண்டும் ஒருமுறையாவது அனுபவிக்க வேண்டும் என்று அனைவரது மனதிலும் இருக்கும்.

ஒரே நாளில் பள்ளி படிப்பை முடிக்கலாம்.. அதுவும் சான்றிதழோடு - அரசு சூப்பர் அறிவிப்பு! | Japan Govt Annonced One Day School For Tourist

அந்த வகையில் அரசே அதற்கு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தினால் எப்படி இருக்கும்? ஆம் ஜப்பான் அரசு இப்படி ஒரு சூப்பர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, ஜப்பானுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தற்போது “ஒரு நாள் மாணவர்” என்று அழைக்கப்படும்

ஒரு புதிய திட்டம் மூலம் மாணவர்களை ஒரு நாள் ஜப்பானிய பள்ளியில் படிக்க வைக்கிறது. ஜப்பானின் சிபா ப்ரிபெக்சரில் உள்ள ஒரு பழைய பள்ளியில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த வாய்ப்பை நீங்கள் வெறும் ரூ.17,000க்கு பெறலாம்.அதாவது 30,000 யென்செலுத்திய பிறகு,

ஜப்பானில் உள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தத் திட்டத்தின் கீழ் உள்ளூர் பள்ளியில் மாணவராக ஒரு நாள் இருக்கலாம். இந்த சுற்றுலா மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஒரு பகுதியாக கையெழுத்து, கட்டானா சண்டை, உடற்கல்வி மற்றும் பல கற்றல் நடவடிக்கைகள் போன்ற பல செயல்பாடுகளை அனுபவிக்க முடியும்.

டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பவர்களுக்கு செம்ம நியூஸ் - வெளியான சூப்பர் தகவல்!

டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பவர்களுக்கு செம்ம நியூஸ் - வெளியான சூப்பர் தகவல்!

அரசு அறிவிப்பு

இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் நடத்தப்படுகிறது. எனினும் சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாக இருந்தாலும் ஜப்பானிய கலாச்சாரத்தையும் கல்வி முறைகளையும் வெளிநாட்டவர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் இது பெரும் பங்காற்றுகிறது.

ஒரே நாளில் பள்ளி படிப்பை முடிக்கலாம்.. அதுவும் சான்றிதழோடு - அரசு சூப்பர் அறிவிப்பு! | Japan Govt Annonced One Day School For Tourist

பள்ளி வரும் மாணவர்கள் கிளாசிக் ஸ்கூல் யூனிஃபார்ம் அல்லது சூட் அணிய வேண்டும். அங்குள்ள ஆசிரியர்கள், பங்கேற்பாளருக்கு எழுத்துக்கலை, பேரிடரில் இருந்து தப்பிக்கும் பயிற்சி, அவசரகால திறன்கள் மற்றும் பாரம்பரிய ஜப்பானிய நடனங்கள் உள்ளிட்ட வகுப்புகளை நடத்துகிறார்கள்.

ஜப்பானில் எப்போதும் நிலநடுக்கம் ஏற்படுகிறது. அப்படி நிலநடுக்கம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும். எந்த வயதினரும் ஒரு நாள் இங்கு மாணவராகலாம். ஆனால், ஒரு நாளில் 30 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

மதிய உணவுக்குப் பிறகு, பங்கேற்பாளர்கள் விளையாட்டு மற்றும் பிற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இறுதியில் அனைவருக்கும் பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்கப்படும். நிகழ்ச்சியின் முடிவில் பங்கேற்பாளர்கள் வகுப்பறையை சுத்தம் செய்ய வேண்டும், இது ஜப்பானிய கலாச்சாரத்தின் மிக முக்கியமான பகுதியாகும்.