இந்தியாவிற்கு 2 புல்லட் ரயில்களை பரிசாக கொடுக்கும் நாடு - இவ்வளவு அம்சங்களா?
இந்தியாவிற்கு 2 புல்லட் ரயில்களை ஜப்பான் பரிசாக வழங்கியுள்ளது.
ஜப்பான் பரிசு
இந்தியாவின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்ததாக புல்லட் ரயில்களை இயக்கத் தயாராகி வருகிறது.
இந்தியாவும், ஜப்பானும் மும்பை-அகமதாபாத் வழித்தடத்தில் புல்லட் ரயில்களுக்கான வடிவமைப்புகளை இறுதி செய்து வருகின்றன. இதற்காக ஷிங்கன்சென் ரயில்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன. அதன்படி, இந்தியாவிற்கு இரண்டு புல்லட் ரயில்களை ஜப்பான் பரிசாக வழங்குகிறது.
ஷின்கான்சென் தொழில்நுட்பத்தின் 55 ஆண்டுகளுக்கும் மேலான செயல்பாட்டில், தொழில்நுட்பக் கோளாறால் எந்த ரயிலும் இதுவரை விபத்தில் சிக்கவில்லை. மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் பாதையின் சிவில் கட்டுமானம் குஜராத், மகாராஷ்டிரா மற்றும் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி முழுவதும் 50% முடிக்கப்பட்டுள்ளது.
புல்லட் ரயில்கள்
குஜராத்தின் MAHSR வழித்தடங்களில் ரயில் வெல்டிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 60 கி.மீ. நீளத்திற்கு ஜப்பானிய தண்டவாளங்கள் நிறுவப்பட்டுள்ளன. BEML இந்த ரயில் பெட்டிகளை பெங்களூரு ரயில் பெட்டி தொழிற்சாலையில் வைத்து தயாரித்து, 2026க்குள் டெலிவரி செய்யவும் திட்டமிட்டுள்ளது.
உலகளவில் மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் சேர் கார் அமைப்புடன், முழுமையான ஏசி வசதியைக் கொண்டிருக்கும். இந்த ரயில், நில அதிர்வு அபாயம் உள்ள சில மண்டலங்களான கட்ச், கொய்னா-வார்னா பகுதி மற்றும் லத்தூர்-உஸ்மானாபாத் வழியாகச் செல்லும் என்பதால்,
ரயில் செல்லும் பாதையில் நிலநடுக்கத்தை முன்கூட்டியே கண்டறியும் வகையில், கருவி பொருத்தப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.