ஆரம்ப பள்ளிக் குழந்தைகளுக்கு கற்பிக்கப்பட்ட 'மரியாதை பாடம்' - இணையதளத்தில் குவியும் பாராட்டு..!

Viral Video Japan
By Nandhini Dec 09, 2022 10:04 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

ஜப்பான் ஆரம்பப் பள்ளிக் குழந்தைகளுக்குக் கற்பிக்கப்பட்ட 'மரியாதை பாடம்' குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது.

'மரியாதை பாடம்'

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஜப்பானில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில் குழந்தைகளுக்கு ‘மரியாதை பாடம்’ ஒன்றை ஆசிரியர் கற்றுக்கொடுத்தார்.

பஸ்ஸில் பயணிக்கும்போது, வயதானவர்களுக்கு, கர்ப்பிணிகளுக்கு, குழந்தை வைத்துள்ள தாய்மார்களுக்கு உட்கார இடம் கொடுக்க வேண்டும் என்று வீடியோவில் குழந்தைகள் நடித்து காண்பித்துள்ளனர்.

மேலும், பயணம் செய்யும்போது மற்றவர்களிடம் மரியாதையுடன் பழக வேண்டும் என்றும் அந்த வீடியோவில் குழந்தைகள் காண்பித்துள்ளனர்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் குழந்தைகளுக்கும், ஆசிரியருக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.   

japan-courtesy-lesson-viral-video