சீனாவை பின்னுக்கு தள்ளிய ஜப்பான்: இந்தியாவுக்கு 33வது இடம்
டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் ஜப்பான் முதலிடத்திலும் ,அமெரிக்கா 2 வது இடத்திலும் , சீனா 3 வது இடத்திலும் உள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. கொரோனா காரணமாக ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு நாடும் பதக்க வேட்டை நடத்தி வருகிறது. முதல் நாளில் இருந்து முதல் இடத்தில் வந்த சீனா இன்று 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
3 ஆம் நிலவரப்படி ஜப்பான் 8 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 13 பதக்கங்களுடன் முதலிடம் பெற்றுள்ளது. 2வதாக உள்ள அமெரிக்கா 7 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என 14 பதக்கங்களும், சீனா 6 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என 18 பதக்கங்கள் பெற்று 3வது இடத்திலும் உள்ளன.
அதேசமயம் இந்தியா ஒரு வெள்ளி பதக்கத்துடன் 33 இடம் பிடித்துள்ளது.