நான் உன்னை எல்லா இடத்திலும் தேடுகிறேன்ம்மா - ஸ்ரீதேவி நினைத்து ஜான்வி உருக்க பதிவு…!
நான் உன்னை எல்லா இடத்திலும் தேடுகிறேன்ம்மா என்று பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவி நினைத்து ஜான்வி உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகை ஸ்ரீதேவி மரணம்
இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாகவும், இந்திய சினிமாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவி. 54 வயதான நடிகை ஸ்ரீதேவி கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி காலமானார்.
நடிகை ஸ்ரீதேவி மரணம் தனது மருமகன் மோஹித் மர்வாவின் திருமணத்தில் கலந்து கொள்ள ஐக்கிய அரபு எமிரேட் ஸ்ரீதேவி தன்னுடைய கணவருடன் சென்றிருந்தார். அங்கு ஸ்ரீதேவி தற்செயலான நீரில் மூழ்கி உயிரிழந்தார். துபாய் ஹோட்டல் குளியல் தொட்டியில் அவர் இறந்து கிடந்தார். ஸ்ரீதேவியின் இறப்பு இன்றளவும் ரசிகர்களால் மறக்கமுடியாத ஒன்றாக உள்ளது.
மகள் ஜான்வி கபூர் உருக்கம்
இந்நிலையில், இன்று நடிகையும், ஸ்ரீதேவியின் மகளுமான ஜான்வி தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஒரு நிகழ்விலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தில், பாரம்பரிய நகைகளுடன் அழகான தங்கப் புடவை அணிந்து ஸ்ரீதேவி இருக்கும் புகைப்படத்தை ஜான்வி கபூர் வெளியிட்டிருந்தார்.
அந்த பதிவில்,
"நான் இன்னும் உன்னை எல்லா இடங்களிலும் தேடுகிறேன் அம்மா, நான் செய்யும் அனைத்து செயல்களிலும் உங்களை பெருமைப்படுத்தவே எண்ணுகிறேன். நான் எங்கு சென்றாலும், என்ன செய்தாலும் அதன் தொடக்கமும், முடிவும் நீங்கள்தான் என்று மறைந்த தன்னுடைய அம்மாவை நினைத்து ஜான்வி உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
தற்போது இது குறித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ஸ்ரீதேவியின் ரசிகர்கள் உருக்கமாக கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், ஜான்விக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.