அம்மாவாகும் பிக் பாஸ் பிரபலம் - யார் தெரியுமா?
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் பிரபலமான மதுமிதா கர்ப்பமாக உள்ள நிலையில் அவருக்கு தற்போது சீமந்தம் நடைபெற்றுள்ளது. அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா காமெடி நடிகைகளில் மிகவும் பிரபலமானவர் நடிகை மதுமிதா. இவர் திரைப்படங்களுக்கு முன்பு சின்னத்திரையில் நடித்து வந்தார்.
அதன் பின் சந்தானத்துடன் இணைந்து ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து பிரபலமானார்.
மதுமிதா விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான லொள்ளு சபா,சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
அந்நிகழ்ச்சியில் தொடர்ந்து பிரச்சனைகள் எழுந்த நிலையில் திடீரென்று நடிகை மதுமிதா தன்னுடைய கையை கத்தியால் அறுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து நடிகை மதுமிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார்.ஆனால் சமீப காலமாக மதுமிதாவை எதிலும் காண முடியவில்லை.
நடிகை மதுமிதா 2019 ஆண்டு மோசஸ் ஜோயல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பின் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இதனிடையே நடிகை மதுமிதா தற்போது கர்ப்பமாக உள்ளார்.அண்மையில் அவருக்கு சீமந்தம் நடைபெற்று உள்ளது.
அந்த புகைப்படங்களும்,வீடியோக்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மதுமிதா கர்ப்பமாக இருப்பதால் அவர் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்துள்ளார்.