Thursday, Jul 10, 2025

பிக்பாஸ் மதுமிதாவிற்கு குழந்தை பிறந்தது - இணையத்தில் குவியும் வாழ்த்துக்கள்

Jangiri Madhumitha
By Nandhini 3 years ago
Report

தமிழில் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் ‘ஜாங்கிரி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்தான் நடிகை மதுமிதா.

இப்படத்தைத் தொடர்ந்து இவருக்கு ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘ராஜா ராணி’, ‘காஞ்சனா 2’, ‘ஸ்கெட்ச்’, ‘விஸ்வாசம்’, ‘டிக்கிலோனா’ தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘பிக்பாஸ் 3’ சீசன் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட மதுமிதா, சில காரணங்களால் அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

நடிகை மதுமிதாவிற்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கியது. கடந்த 2019-ம் ஆண்டு மோசஸ் ஜோயல் என்பவரை திருமணம் செய்துகொண்டார் மமிதா. சமீபத்தில் கர்ப்பிணியான மதுமிதாவிற்கு வளைகாப்பு நடத்தப்பட்டது.

இது குறித்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் மதுமிதா வெளியிட்டார். அப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில், மதுமிதாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதை அறிந்த ரசிகர்கள், சமூகவலைதளங்களில் மதுமிதாவை நடிகர்கள், ரசிகர்கள் மழை மழையில் நனைய வைத்து வருகின்றனர். 

பிக்பாஸ் மதுமிதாவிற்கு குழந்தை பிறந்தது - இணையத்தில் குவியும் வாழ்த்துக்கள் | Jangiri Madhumitha

பிக்பாஸ் மதுமிதாவிற்கு குழந்தை பிறந்தது - இணையத்தில் குவியும் வாழ்த்துக்கள் | Jangiri Madhumitha