ஜனநாயகன்: உச்சநீதிமன்றத்தை நாடிய படக்குழு
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்கு இன்னும் தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காததால், படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.
நீதிமன்ற விசாரணை
ஜனநாயகன் படத்தை பொங்கலுக்கு வெளியாக்குவது தொடர்பில் இந்த விவகாரம் தொடர்பாக வரும் 21தேதி மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.
இந்த நிலையில், பொங்கல் விடுமுறை வசூலை குறிவைத்து ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், படத்தை பொங்கலுக்குள் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை தயாரிப்பு குழுவினர் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்து.

‘ஜன நாயகன்’ படத்திற்கான தணிக்கை விவகாரம் தொடர்பாக மறு விசாரணைக் குழுவினருக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதற்கு இதுவரை உரிய பதில் கிடைக்காத நிலையில், சட்ட ரீதியான வழிமுறைகள் மூலம் படத்தை வெளியிடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக தற்போது அடுத்த கட்ட ஆயத்த பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து படக்குழுவினர் கூறுகையில், பொங்கல் வெளியீட்டுக்காக விஜயின் ‘ஜன நாயகன்’ படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மக்களின் நிலை மற்றும் திரையரங்கு உரிமையாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு, தொழில் மற்றும் வியாபார நஷ்டங்களை தவிர்க்கும் வகையிலேயே படம் வெளியிடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினர்.
இந்நிலையில், தயாரிப்பாளர் தரப்பில் நாளை மறுநாள் (12-ந்தேதி) திங்கட்கிழமை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.