வழக்கை திரும்ப பெறும் ஜனநாயகன்?

Vijay JanaNayagan
By Pavi Jan 28, 2026 10:38 AM GMT
Report

சென்னை உயர் நீதிமன்றத்தில் தணிக்கை வாரியத்துக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை ஜன நாயகன் படக்குழு திரும்பப் பெற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 தணிக்கை வாரியம்

நடிகர் விஜயின் உயர் நீதிமன்றத்தில் தணிக்கை வாரியத்துக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை ஜன நாயகன் படக்குழு திரும்பப் பெற திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

கே.வி.என். புரொடக்ஷன் நிறுவனம் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி. ஆஷா, “ஜனநாயகன்” என்ற படம் மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என்ற பரிந்துரையை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

வழக்கை திரும்ப பெறும் ஜனநாயகன்? | Jananayagan Team Plans Withdraw Audit Certificate

இந்த படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்று கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து நீதிபதியின் உத்தரவை எதிா்த்து மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமா்வு ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்கும் தனிநீதிபதியின் உத்தரவை நேற்று ரத்து செய்தனர்.

இந்த நிலையில் தற்போது தணிக்கை வாரியம் பதிலளிக்க உரிய காலஅவகாசம் அளித்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று தனிநீதிபதி பி.டி.ஆஷாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வழக்கை திரும்ப பெறும் ஜனநாயகன்? | Jananayagan Team Plans Withdraw Audit Certificate

இது ஒரு பக்கம் இருக்க தணிக்கை வாரியத்துக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற்றுவிட்டு, மறுஆய்வுக் குழுவை அணுக படத்தின் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்பொழுது படக்குழு வழக்கை திரும்பப் பெறுமா அல்லது தனி நீதிபதி விசாரணை தொடருமா என்பதை இறுதி முடிவு செய்யப்படுகிறது.