விரைவில் வெளியாகிறது ஜனநாயகன்: புது தகவல்
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜனநாயகன், பொங்கல் விருந்தாக வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தணிக்கை சான்று கிடைக்காததால் தாமதமானது.
தொடர்ந்து படக்குழுவினர் வழக்கு தொடர, நீதிமன்றம் நிலுவையில் இருந்தது.
இந்நிலையில் ஜனநாயகன் திரைப்படம் தணிக்கை குழுவுக்கு மீண்டும் அனுப்பப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது படத்தை மறு ஆய்வு செய்யக்கோரி, அதிகாரப்பூர்வ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சம்பந்தப்பட்ட சான்றிதழ் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
எனவே விரைவில் தணிக்கை சான்றிதழ் கிடைத்துவிடும் என சொல்லப்படுகிறது. மறுஆய்வு செயல்முறையின் போது, 20 நாட்களுக்குள் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்படும், அந்த குழு ஜனநாயகன் படத்தை பார்த்த பின்னர் 4 நாட்களுக்குள் சான்றிதழ் வழங்கப்படலாம்.
மார்ச் மாதம் படம் வெளியாகுமா என எதிர்பார்த்த நிலையில், பன்னிரெண்டு, பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என்பதால் பள்ளி விடுமுறை நாளில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
அரசியல் தலைவராக விஜய்யின் முதல் படம் என்பதும், நடிகராக கடைசி படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.