ஜனநாயகன் கசிந்ததால் இத்தனை கோடி நஷ்டமா?

JanaNayagan
By Fathima Apr 11, 2026 12:20 PM GMT
Report

பொங்கல் வெளியீடாக வரவிருந்த நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் தணிக்கை குழு பிரச்சனையால் தாமதமானது.

கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், தணிக்கை குழு சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஆனது.

இதனால் பட வெளியீடும் தள்ளிப்போனது, இதற்கிடையே விஜய்யின் தமிழக வெற்றி கழகம் முதன்முறையாக தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில் படவெளியீடு மேலும் தள்ளிப்போனது.

ஜனநாயகன் கசிந்ததால் இத்தனை கோடி நஷ்டமா? | Jananayagan Released In Net

இந்நிலையில் ஜனநாயகன் படத்தின் 5 நிமிடங்கள் கொண்ட சண்டைக்காட்சி இணையத்தில் கசிந்த நிலையில் மொத்த படமும் வெளியாகியுள்ளது.

இதற்கு திரைப்பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர், இதற்கிடையே இதுதொடர்பான விசாரணையை தொடங்கியுள்ளது சைபர் க்ரைம்.

இதற்கிடையே, ஜனநாயகன் படத்தை அடுத்த வாரம் வெளியிட நடவடிக்கை எடுத்து வருவதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகன் கசிந்ததால் இத்தனை கோடி நஷ்டமா? | Jananayagan Released In Net

அவர் கூறுகையில், ஜனநாயகன் வெளியானது மிகப்பெரிய அதிர்ச்சி, இதனால் திரைத்துறைக்கு 400 முதல் 500 கோடி இழப்பு ஏற்படும், ஓடிடி உரிமம் வழங்கப்பட்ட நிலையில் படவெளியீடு மேலும் தள்ளிப்போனதால் ஓடிடி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது, மீண்டும் அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

விநியோகஸ்தர்களும் 70 கோடி ரூபாய் அளவில் தயாரிப்பாளரிடம் பணம் கொடுத்துள்ளனர். அவர்களும் அந்த பணத்தை திரும்பக் கேட்பார்கள். எப்படி இருந்தாலும் தயாரிப்பாளருக்கு தான் அனைத்து நஷ்டமும் ஏற்படும்.

இனி வெளியானால் 100 கோடி தொடுமா என்பது சந்தேகம் தான், ஆனாலும் இக்கட்டான சூழலில் எந்தளவுக்கு முடியுமோ அதனை செய்து கொடுப்பதாக தீர்மானித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.