"அவர் என்னோட டைரக்டர் நான் கூப்பிட்டா அவருக்கு கேட்கும்" விஜய் சேதுபதியின் உருக்கமான பேச்சு

vijay dead director sethupathi jananathan
By Jon Mar 16, 2021 02:44 PM GMT
Report

யக்குனர் ஜனநாதன் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது விஜய் சேதுபதி உருக்கமாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளன. தேசிய விருது பெற்ற இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் - விஜய் சேதுபதி கூட்டணியில் 'லாபம்' திரைப்படம் உருவாகி வந்தது. இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 11-ம் தேதி எடிட்டிங் ஸ்டுடியோவில் இருந்து மதிய உணவு சாப்பிட வீட்டுக்குச் சென்றார்.

நீண்ட நேரமாகியும் ஸ்டுடியோவுக்கு திரும்பி வராததால் அவரது உதவியாளர் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது தனது அறையில் மயக்கமடைந்த நிலையில் இருந்துள்ளார் ஜனநாதன். உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சுயநினைவு திரும்பவில்லை. தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்த அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பால் மரணமடைந்தார்.

அவரது மரணம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இதையடுத்து நேற்று சென்னை மயிலாப்பூரில் இறுதிச்சடங்கு நடைபெற்றது. விஜய் சேதுபதி உள்ளிட்ட திரையுலகினர் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். பின்பு மயிலாப்பூர் மின் மயானத்தில் ஜனநாதனின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் ஜனநாதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் அவருக்கான மருத்துவ செலவுகள் அனைத்தையும் நடிகர் விஜய் சேதுபதி செலுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது. மருத்துவமனையில் இருந்தபோதே அங்கு நேரில் வந்த விஜய் சேதுபதி சுயநினைவின்றி இருந்த ஜனநாதனை தனது கையால் தட்டி எழுப்ப முயன்றுள்ளார்.

அப்போது அருகிலிருந்தவர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று கேட்க அவர் என்னுடைய இயக்குநர். நான் அழைப்பது அவருக்கு கேட்கும். எழுந்து வந்துவிடுவார் என்று உருக்கமாக கூறியுள்ளார். இத்தகவலை பேராண்மை படத்தில் நடித்தவரும் எஸ்.பி.ஜனநாதன் அலுவலகத்தில் வேலை செய்பவருமான நடிகை சரண்யா இணைய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.