இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்: சோகத்தில் திரையுலகம்
இயற்கை,ஈ,பேராண்மை,உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலமாக பிரபலமான இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் காலமானர். கடந்த 11.03.2021 மயங்கிய நிலையில் வீட்டில் காணப்பட்டார். உடன் இருந்தவர்கள் அவரை மீட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.ஜனநாதனுக்கு மூளை சாவு ஏற்பட்ட நிலையில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்தார்.
இந்த நிலையில், இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் (61) சிகிச்சை பலனின்றி காலமானார். அவர் இயக்கிய முதல் படமான 'இயற்கை' தேசிய விருது பெற்றது.
கடைசியாக அவர் நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் 'லாபம்' என்ற திரைப்படத்தை இயக்கி, படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தொகுப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.