எஸ்.பி.ஜனநாதன் இறந்து 2 நாளில் மற்றொரு சோகம்! பேரதிர்ச்சியில் குடும்பத்தினர்
பிரபல இயக்குனரான எஸ்பி ஜனநாதன் இறந்து 2 நாட்களில் அவரது தங்கை லக்ஷிமியும் மரணமடைந்ததால் குடும்பத்தினரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனரான எஸ்பி ஜனநாதன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் காலமானார்.
இவரது மரணத்தால் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர், தொடர்ந்து கடந்த 15ம் தேதி சென்னை மயிலாப்பூர் இறுதிச்சடங்கு நடைபெற்றதுடன், மின்மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனநாதனின் இழப்பை தாங்க முடியாமல் சோகத்தில் இருந்த அவரது தங்கை லக்ஷமி மாரடைப்பு இன்று காலமானார்.
அடுத்தடுத்து இரண்டு மரணங்கள் அவரது குடும்பத்தினர் மத்தியிலும் திரைத்துறையிலும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.