விஜய்யின் ஜனநாயகன் பட தணிக்கை வழக்கில் இன்று தீர்ப்பு

Vijay JanaNayagan
By Yashini Jan 27, 2026 04:29 AM GMT
Report

நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது.

ஜன நாயகன் படத்திற்கு தணிக்கைச் சான்று வழங்க வேண்டும் என கே.வி.என். புரொடக்ஷன் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

விஜய்யின் ஜனநாயகன் பட தணிக்கை வழக்கில் இன்று தீர்ப்பு | Jananaayagan Censorship Certificate Case Judgement

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி. ஆஷா, படத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என தணிக்கை வாரிய தலைவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்குகிறது.