இந்த மாதம் வெளியாகும் ஜனநாயகம் படம்?

Vijay JanaNayagan
By Yashini Jul 02, 2026 10:26 AM GMT
Report

தமிழக முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் வெளியீட்டு தேதி குறித்த புதிய தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஜனநாயகம் திரைப்படம்

எச். வினோத் இயக்கத்தில், தமிழக முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த மாதம் வெளியாகும் ஜனநாயகம் படம்? | Jana Nayagan Movie Release Date Spread On Sm

இதற்கிடையில், படத்தின் சில காட்சிகள் இணையத்தில் கசிந்தது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது, படத்தின் வெளியீட்டு தேதி குறித்து புதிய தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

படக்குழு திட்டம்

ஜனநாயகன் படத்திற்கு அடுத்த 3 நாட்களுக்குள் தணிக்கைச் சான்றிதழ் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், படத்தை ஜூலை மாதத்திலேயே வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், ஜூலை 16 அல்லது ஜூலை 23 ஆகிய தேதிகளில் படம் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

எனினும், இதுவரை படக்குழு சார்பில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.