விஜயின் ஜனநாயகன் திரைப்படத்தின் ஓடிடி உரிமம் ரத்து?
ஜன நாயகன் படத்தின் ஓடிடி உரிமம் ஒப்பந்தத்தை பிரபல ஓடிடி நிறுவனம் ரத்து செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில், விஜயின் ஜனநாயகன் படம், பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தணிக்கை பிரச்சனை காரணமாக படம் இன்னும் வெளியாகவில்லை.
இதனால் தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு கிட்டத்தட்ட ஒரு மாதமாக நடந்து வந்தது.
நீதிமன்றம் மூலம் சென்றால் தாமதம் அதிகமாகும் என்பதால், வழக்கை திரும்பப் பெற்று மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில், மறுதணிக்கை குழுவினர் படத்தை பார்த்து சான்று அளிக்காமல் தாமதப்படுத்துகின்றனர்.
எப்போது வேண்டுமானாலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்ற சூழலில் விஜயின் தவெக கட்சி தேர்தலில் போட்டியிடுவதால் பிரச்சார படமாக கருதி இப்படத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி மறுக்கும்.

தேர்தல் நிறைந்தவடைத்த பின்னர் மே அல்லது ஜூன் மாதம் தான் படம் வெளியாகும் என்ற சூழல் உருவாகிறது.
திட்டமிட்ட தேதியில் இருந்து 5 மாதங்கள் கழித்தே படம் வெளியாகும் என்பதால் 500 கோடி வரை செலவு செய்துள்ள கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் பெரும் இழப்பீட்டை சந்திக்க நேரிடும்.
இந்நிலையில், படத்தின் ஓடிடி உரிமத்தை ரூ. 120 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படும் அமேசான் ப்ரைம் நிறுவனம், ஒப்பந்தத்தை ரத்து செய்யும் முடிவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.