ஓடிடியில் வெளியாகும் விஜயின் ஜனநாயகன் திரைப்படம்?

Vijay JanaNayagan
By Yashini Jan 21, 2026 01:41 PM GMT
Report

நடிகர் விஜய் நடித்த ஜன நாயகன் படம் ஓடிடியில் வெளியாகும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் ஓடிடி உரிமையை வாங்கியுள்ள அமேசான் ப்ரைம் நிறுவனம் இதுகுறித்து எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால், படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகுமா என்ற சந்தேகம் உருவாகியுள்ளது.

ஓடிடியில் வெளியாகும் விஜயின் ஜனநாயகன் திரைப்படம்? | Jana Nayagan Amazon Prime Issues Ott Release

ஜன நாயகன் படம் ஜனவரி 9 அன்று வெளியாக இருந்த நிலையில், தணிக்கை சான்றிதழ் தாமதம் காரணமாக வெளியீடு நிறுத்தப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதனைதொடர்ந்து இன்று நடந்த விசாரணையில் தீர்ப்பு தேதி சொல்லாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஓடிடி வெளியீட்டுக்கு தணிக்கை சான்றிதழ் தேவையில்லை என்பதால், ஜன நாயகன் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாவதில் சிக்கல் இருக்காது என்று கூறப்படுகிறது.