ஜம்மு காஷ்மீர் பயங்கர குண்டு வெடிப்பு - சிறுவன் பலி - 5 பேர் படுகாயம்…!

Jammu And Kashmir
By Nandhini Jan 02, 2023 11:15 AM GMT
Report

ஜம்மு காஷ்மீர், ரஜோரியின் டாங்ரி கிராமத்தில் பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடி தாக்குதலில் சிறுவன் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் பயங்கர வெடிகுண்டு வெடிப்பு

இன்று ஜம்மு காஷ்மீர், ரஜோரியின் டாங்ரி கிராமத்தில், ராஜேந்திர குமாரின் வீட்டிற்கு வெளியே காலை 9:45 மணியளவில் பயங்கரவாதிகள் திடீரென குண்டுவெடிப்பு நிகழ்த்தினர். இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் ராஜேந்திர குமாரின் மகன் தீபக் உயிரிழந்துள்ளார். பலர் படுகாயம் அடைந்தள்ளனர்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர். மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர்.

jammu-kashmir-terrible-bomb-blast

ரஜோரி நகரில் பதற்றம்

நேற்று பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் அதே கிராமத்தில் 4 பொதுமக்கள் கொலை செய்யப்பட்டனர். 6 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 2 தீவிரவாதிகள் ஒருவருக்கொருவர் 50 மீட்டர் தொலைவில் உள்ள 3 வீடுகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் மேல் டாங்ரியின் உள்ளூர் கிராமவாசிகள் என அடையாளம் காணப்பட்ட 4 பேர் கொல்லப்பட்டனர். தற்போது, ​​குற்றம் நடந்த இடத்தில் பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாக்குதலுக்குப் பிறகு, ஜம்மு-காஷ்மீர் போலீஸ் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) மற்றும் இந்திய ராணுவம் அந்த பகுதியை சீல் வைத்துள்ளது. ரஜோரி நகரில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றன. இதனால், சாலைகளில் நெரிசல் ஏற்பட்டது.

கடந்த டிசம்பர் 16ம் தேதி இதேபோல் துப்பாக்கிச் சூடு ரஜோரியில் நடைபெற்றது. இதில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். ஒருவர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.