காஷ்மீரில் பதற்றம் - ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்க தளபதி சுட்டுக் கொலை
ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனையடுத்து, காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் ராவல்போரா என்ற பகுதியில் பாதுகாப்பு படையினர், போலீசார் கூட்டாக இணைந்து நேற்று முன்தினம் இரவு தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
அப்போது, பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் சிலர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இந்த தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுத்தார்கள். இந்த என்கவுண்ட்டரில் ஒரு பயங்கரவாதியை போலீசார் சுட்டு கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, இன்றும் மீண்டும் சோபியானில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் கூட்டாக இறங்கியுள்ளனர்.
இந்த என்கவுண்ட்டரில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் தளபதி சஜத் ஆப்கானி சுட்டு கொலை செய்யப்பட்டார். இதனால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்திருக்கிறது. சஜத் கொலை செய்யப்பட்டதற்கு காஷ்மீர் ஐ.ஜி. தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

கொல்லப்பட்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்க தளபதி சஜத், பயங்கரவாத இயக்கத்தில் புதிய இளைஞர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார் என்று பாதுகாப்பு படையினர் தெரிவித்திருக்கிறார்கள்.