அதிகரிக்கும் தாக்குதல்கள் : காஷ்மீரில் வங்கி மேலாளர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை

By Irumporai Jun 02, 2022 09:11 AM GMT
Report

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காமில் ராஜஸ்தானை சேர்ந்த வங்கி மேலாளர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

காஷ்மீரில் கடந்த சில நாட்களாக வெளி மாநிலத்தவர்களின் மீதான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது , கடந்த மே மாதம்- 31ல் பள்ளி ஆசிரியர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் வெளி மாநிலத்தவர்கள் மீதான தாக்குதல் தொடர்கிறது.

இந்த நிலையில் காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த விஜயகுமார் பயங்கரவாதியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

 வங்கியில் விஜயகுமார்  பணியாற்றிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த தீவிரவாதி தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டான்.

பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியினை ஏற்படுத்திய நிலையில் குல்காமில் வங்கி மேலாளரின் கொலை, சம்பவத்தை போலவே அருகிலுள்ள ஷோபியான் மாவட்டத்தில் ஃபாரூக் அகமது ஷேக் என்பவரது வீட்டில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் காயமடைந்தார்.

அதே போல் இன்று அதிகாலை வாகனத்தில் வெடித்ததில் மூன்று வீரர்கள் காயமடைந்தனர். இதில் ராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக தீவிரவாத தாக்குதல் அதிகரித்து வருவது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.