நடை மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு 62 பேர் படுகாயம்

Jammu And Kashmir Death
By Thahir Apr 15, 2023 02:38 AM GMT
Report

ஜம்மு காஷ்மீல் பைசாகி கொண்டாட்டத்தின் போது, நடைமேம்பாலம் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் 62 பேர் படுகாயமடைந்தனர்.

பாலம் இடிந்து விழுந்தது 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில், பெயின் கிராமத்தில் உள்ள பெனிசங்கத்தில் பைசாகி கொண்டாட்டத்தின் போது, மிகப்பெரும் நடைமேம்பாலம் இடிந்து விழுந்து, விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார் மேலும் குழந்தைகள் உட்பட 62 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

jammu-footbridge-collapse-one-killed-and-80-injure

பாலம் இடிந்து விழுந்தபோது, அந்த பாலத்தில் ஏராளமானோர் இருந்ததால், பாரம் தாங்காமல் இடிந்து விழுந்ததாகவும், எழும் இந்த விபத்தில் எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை என ஜம்மு பிரதேச ஆணையர் ரமேஷ் குமார் தெரிவித்தார்.

மீட்பு பணிகள் தீவிரம் 

செனானி நகராட்சி தலைவர் மாணிக் குப்தா, இந்த விபத்து குறித்து கூறும்போது, 20-25 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். இதில் 6-7 பேரை மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம்.

இந்த சம்பவம் குறித்து அறிந்ததும், மத்திய அமைச்சரும், உதம்பூர் எம்பியுமான ஜிதேந்திர சிங், நாங்கள் உள்ளூர் நிர்வாக அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம், தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.