சுந்தரா டிராவல்ஸ் பஸ்ஸாக மாறிய விமானம் : எலியால் நடந்த அட்டகாசம்
By Petchi Avudaiappan
ஸ்ரீநகரில் விமானம் ஒன்று எலியால் தாமதமாக புறப்பட்ட சம்பவம் பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து ஜம்முவுக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று நேற்று மதியம் புறப்பட தயாராக இருந்தது. அப்போது தான் கடைசி நேரத்தில் அந்த விமானத்தில் ஒரு எலி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் விமானம் புறப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டு எலியை பிடிக்கும் பணி நடைபெற்றது. இச்சம்பவம் காரணமாக சுமார் 2 மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டு சென்றது. சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரணை நடத்தி வரும் நிலையில் இதுகுறித்து பயணிகளிடையே அதிருப்தி தெரிவித்துள்ளனர்.