ஜம்முவில் முன்னாள் முதலமைச்சர் கொலை செய்ய முயற்சி: பதறவைக்கும் வீடியோ காட்சிகள்

Jammu And Kashmir
By Fathima Mar 12, 2026 03:45 AM GMT
Report

ஜம்மு காஷ்மீரில் முன்னாள் முதலமைச்சரான பரூக் அப்துல்லாவை கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்முவின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள ராயல் பார்க் திருமண மண்டபத்தில் நேற்று மாலை திருமண நிகழ்வு நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்ற பரூக் அப்துல்லாவை கொலை செய்ய முயன்றுள்ளனர்.

அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த நபர், திடீரென துப்பாக்கியை எடுத்து சுட முயல்கிறார், உடனடியாக பாதுகாப்பு படை கமாண்டோக்கள் தடுத்து நிறுத்தினர்.

ஜம்முவில் முன்னாள் முதலமைச்சர் கொலை செய்ய முயற்சி: பதறவைக்கும் வீடியோ காட்சிகள் | Jammu Ex Pm Viral Video

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிரவைத்துள்ளது, உடனடியாக அவரை பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், இந்த தருணத்திற்காக 20 ஆண்டுகளாக காத்திருந்தேன் என அவர் கூறியது இன்னும் அதிர்ச்சியை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பதிவிட்டுள்ள முதலமைச்சர் உமர் அப்துல்லா, அல்லாஹ் கருணைமிக்கவன், என் தந்தை உயிர் தப்பினார், முன்னாள் முதலமைச்சரை இப்படி ஒரு நபர் நெருங்கி வந்தது எப்படி, இது மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு, பாதுகாப்பு படையினரின் சமயோகித புத்தியால் படுகொலை முயற்சி தடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.