ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தில் பேருந்து விழுந்து விபத்து - ஒருவர் பலி - 64 பேர் படுகாயம்...!

Jammu And Kashmir Accident
By Nandhini Oct 03, 2022 11:55 AM GMT
Report

ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தில் பேருந்து விழுந்து விபத்துகுள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பள்ளத்தில் பேருந்து விழுந்து விபத்து 

ஜம்மு காஷ்மீர் மாநிலம், மௌங்கிரி, கோர் கலியில் இருந்து உதம்பூர் நோக்கி பயணிகள் பேருந்து சென்று கொண்டிருந்தது.

அப்போது, பேருந்து மன்சார் மோர் என்ற இடத்தில் பேருந்து வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் தலைகுப்புற பேருந்து விழுந்தது.

இந்த விபத்தில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 64 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காயமடைந்த அனைவரையும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

jammu-and-kashmir-accident