'அந்த பொண்ணை பார்த்து சிரிச்சது குத்தமா?’ - வைரலான ஆர்சிபி வீரரின் ஒற்றை புகைப்படம்

Kyle Jamieson IPL2021 RCBvKKR
By Petchi Avudaiappan Sep 21, 2021 10:02 PM GMT
Report

பெங்களூரு - கொல்கத்தா அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் நடைபெற்ற சுவாரஸ்ய சம்பவம் ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது. 

ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற  பெங்களூரு - கொல்கத்தா அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி கொல்கத்தா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 92 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இதனிடையே அந்த அணி விக்கெட்டுகளை இழந்து கொண்டிருந்தபோது நேரடி ஒளிபரப்பில் பெங்களூரு அணி வீரர்களின் கேலரி காட்டப்பட்டது. அப்போது ஆர்சிபி அணியின் பவுலர் கைல் ஜேமிசன் காலில் கால் பேடு கட்டியபடி அமர்ந்து இருந்தார். ஆனால் அவர் ஆட்டத்தை பார்த்து கொண்டிருக்காமல் பின் வரிசையில் அமர்ந்திருந்த அணியின் மசாஜ் தெரபிஸ்ட் நவனிதா கவுதம் என்ற பெண்ணை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார். 

நவனிதாவும் அவரைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார். இந்த காட்சி டிவியில் தோன்ற மறுகணம் சமூக வலைத்தளங்கள் களைக்கட்டத் தொடங்கின. மீம்ஸ்கள், கண்டனம் என சகலமும் ஜேமிசனுக்கு எதிராக பறந்தன.