புதிய அழகிய விண்மீனின் அகச்சிவப்புக் காட்சியை பூமிக்கு அனுப்பியது ‘ஜேம்ஸ் வெப்’ - விஞ்ஞானிகள் மகிழ்ச்சி
'ஜேம்ஸ் வெப்' தொலைநோக்கி அழகான விண்மீனின் அகச்சிவப்புக் காட்சியை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது. இதனால், நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஜேம்ஸ் வெப்
ஐரோப்பிய மற்றும் கனடா விண்வெளி மையங்களுடன் இணைந்து விண்வெளியை ஆய்வு செய்வதற்காக தொலைநோக்கி ஒன்றை நாசா உருவாக்கி இருக்கிறது. இந்த தொலைநோக்கிற்கு 'ஜேம்ஸ் வெப்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த தொலை நோக்கி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரஞ்ச் கயானாவிலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. மொத்தமாக 5 ராக்கெட்டுகள் உதவியுடன் விண்ணில் இந்த தொலைநோக்கி ஏவப்பட்டது. இந்த தொலைநோக்கி சூரியனை சுற்றிய புவி வட்டப்பாதையில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
பிரபஞ்சத்தின் அரிய புகைப்படங்கள்
பிரபஞ்சத்தின் அரிய புகைப்படங்களை பூமிக்கு அனுப்பிய ஜேம்ஸ் வெப் சமீபத்தில் பிரபஞ்சத்தின் அரிய புகைப்படங்களை பூமிக்கு ஜேம்ஸ் வெப் அனுப்பி வைத்தது. பூமியில் இருந்து 8 ஆயிரத்து 500 ஓளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கரீனா நிபுலா பிரபஞ்சம், 1,150 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஸ்பெக்டர்ம் பிரபஞ்சம், 2 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள சதர்ன் ரிங் நிபுலா பிரபஞ்சம், 290 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஸ்டீபன்ஸ் குவாண்ட் எனப்படும் 5 விண்மீன்களின் தொகுப்பு ஆகிய பிரபஞ்சத்தின் புகைப்படங்களை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பூமிக்கு அனுப்பி வைத்தது.

வியாழனின் புதிய புகைப்படம்
அதேபோல், சமீபத்தில் ‘ஜேம்ஸ் வெப்’ தொலைநோக்கி வியாழனின் புதிய படங்களை கைப்பற்றி பூமிக்கு அனுப்பியது. இந்த புதிய புகைப்படங்கள் வியாழனின் வடக்கு மற்றும் தெற்கு துருவங்களுக்கு மேலே உயரமான உயரத்திற்கு செல்லும்போது, புலப்படும் அரோராக்களைக் கொண்டுள்ளது. தற்போது இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அழகிய விண்மீனின் அகச்சிவப்புக் காட்சி
தற்போது ‘ஜேம்ஸ் வெப்’ தொலைநோக்கி விண்மீனின் அகச்சிவப்புக் காட்சி புதிய படங்களை கைப்பற்றி பூமிக்கு அனுப்பியுள்ளது. தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூகவைலத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் நாசா விஞ்ஞானிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
1/ Here we have some brand new images of the Phantom Galaxy, M74, taken by a tag team of Hubble and Webb. Left is @HUBBLE_space 's optical image, with the right being @ESA_Webb 's infrared view of the same galaxy. In the centre is the astonishing composite of the two. pic.twitter.com/uSSyOzEqT4
— ESA Webb Telescope (@ESA_Webb) August 30, 2022