Wow... கண்ணை கவரும் ஒளி ஊடுருவக்கூடிய நட்சத்திரங்களின் படங்களை பூமிக்கு அனுப்பிய ‘ஜேம்ஸ் வெப்’...!
கண்ணை கவரும் ஒளி ஊடுருவக்கூடிய நட்சத்திரங்களின் படங்களை ‘ஜேம்ஸ் வெப்’ பூமிக்கு அனுப்பியுள்ளது. இதனால் நாசா விஞ்ஞானிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஜேம்ஸ் வெப்
ஐரோப்பிய மற்றும் கனடா விண்வெளி மையங்களுடன் இணைந்து விண்வெளியை ஆய்வு செய்வதற்காக தொலைநோக்கி ஒன்றை நாசா உருவாக்கி இருக்கிறது. இந்த தொலைநோக்கிற்கு 'ஜேம்ஸ் வெப்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த தொலை நோக்கி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரஞ்ச் கயானாவிலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. மொத்தமாக 5 ராக்கெட்டுகள் உதவியுடன் விண்ணில் இந்த தொலைநோக்கி ஏவப்பட்டது. இந்த தொலைநோக்கி சூரியனை சுற்றிய புவி வட்டப்பாதையில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
வியாழனின் புதிய புகைப்படங்கள்
சமீபத்தில் ‘ஜேம்ஸ் வெப்’ தொலைநோக்கி வியாழனின் புதிய படங்களையும், வெப் நெப்டியூனின் முதல் படத்தையும் ‘ஜேம்ஸ் வெப்’ தொலைநோக்கி பூமிக்கு அனுப்பி வைத்தது.
இந்த புகைப்படத்தில் பனி ராட்சத கிரகத்தை ஒரு புதிய வெளிச்சத்தில் வெளிப்படுத்தியது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த விசித்திரமான கிரகத்தின் வளையங்களின் தெளிவாக அந்த புகைப்படத்தில் பார்க்க முடிந்தது.

மிதக்கும் நட்சத்திரங்கள்
இந்நிலையில், கண்ணை கவரும் ஒளி ஊடுருவக்கூடிய நட்சத்திரங்களின் புகைப்படங்களை ‘ஜேம்ஸ் வெப்’ தொலைநோக்கி கைப்பற்றி பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்த புகைப்படங்களை நாசா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அந்த புகைப்படத்தில், புதிதாக உருவாகும் ஏராளமான மிதக்கும் நட்சத்திரங்கள், அதில் ஒளி ஊடுருவக்கூடிய வாயு மற்றும் தூசிகளின் மத்தியில் பனித்துளிகள் போல் மின்னுகின்றன.
இது குறித்து நாசா கூறுகையில், இந்த புகைப்படத்தில் புதிதாகப் பிறந்த நட்சத்திரங்களின் மிகத் துல்லியமான எண்ணிக்கையை அடையாளம் காட்டுகிறது. மில்லியன் கணக்கான ஆண்டுகளில் இந்த தூசி நிறைந்த மேகங்களிலிருந்து நட்சத்திரங்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் வெடிக்கின்றன என்பதைப் பற்றிய தெளிவான புரிதலை உருவாக்க இது உதவும் என்று தெரிவித்திருக்கிறது.
தற்போது இது குறித்த வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
This is what you’ve waited for.
— NASA Hallo-Webb Telescope ??? (@NASAWebb) October 19, 2022
Journey with us through Webb’s breathtaking view of the Pillars of Creation, where scores of newly formed stars glisten like dewdrops among floating, translucent columns of gas and dust: https://t.co/5ea1kCzU5x
Here’s your guided tour ⬇️ pic.twitter.com/jFiDDrMUPl
If this majestic landscape looks familiar, you may recognize the original. Here, @NASAHubble’s iconic view, taken in visible light, is on the left. Webb “sees” in infrared light invisible to our eyes, allowing it to pierce through the dust and reveal stars galore (right). pic.twitter.com/iZVXOhcuRH
— NASA Hallo-Webb Telescope ??? (@NASAWebb) October 19, 2022