வியாழனின் அழகிய புதிய படங்களை மீண்டும் பூமிக்கு அனுப்பிய ‘ஜேம்ஸ் வெப்’ - விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

NASA James Webb Telescope
By Nandhini Sep 13, 2022 06:47 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

சமீபத்தில் 'ஜேம்ஸ் வெப்' தொலைநோக்கி பிரபஞ்சத்தின் அரிய புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வைத்திருந்தது. இதனையடுத்து, தற்போது மீண்டும் வியாழனின் புதிய புகைப்படத்தை கைப்பற்றியுள்ளது ஜேம்ஸ் வெப். இதனால் நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஜேம்ஸ் வெப்

ஐரோப்பிய மற்றும் கனடா விண்வெளி மையங்களுடன் இணைந்து விண்வெளியை ஆய்வு செய்வதற்காக தொலைநோக்கி ஒன்றை நாசா உருவாக்கி இருக்கிறது. இந்த தொலைநோக்கிற்கு 'ஜேம்ஸ் வெப்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த தொலை நோக்கி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரஞ்ச் கயானாவிலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. மொத்தமாக 5 ராக்கெட்டுகள் உதவியுடன் விண்ணில் இந்த தொலைநோக்கி ஏவப்பட்டது. இந்த தொலைநோக்கி சூரியனை சுற்றிய புவி வட்டப்பாதையில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

வியாழனின் புதிய புகைப்படங்கள்

சமீபத்தில் ‘ஜேம்ஸ் வெப்’ தொலைநோக்கி வியாழனின் புதிய படங்களை கைப்பற்றியது. அது வியாழனின் வடக்கு மற்றும் தெற்கு துருவங்களுக்கு மேலே உயரமான உயரத்திற்கு செல்லும்போது, புலப்படும் அரோராக்களைக் கொண்டிருந்தது.

அதேபோல், தற்போது மீண்டும் வியாழனின் அழகிய புதிய புகைப்படங்களை ‘ஜேம்ஸ் வெப்’ கைப்பற்றியுள்ளது. இப்படங்கள் பூமியை விழுங்கும் அளவுக்குப் பெரிய புயலான வியாழனின் பெரிய சிவப்புப் புள்ளியை இதில் காண முடிகிறது.

தற்போது இது குறித்த வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

james-webb-space-telescope-nasa