கிரகத்தின் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடை வாயு கண்டுபிடிப்பு - விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

NASA James Webb Telescope
By Nandhini Aug 26, 2022 12:03 PM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

விண்வெளி கிரகத்தின் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடை வாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், விஞ்ஞானிகள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

பிரபஞ்சத்தின் அரிய புகைப்படங்கள்

பிரபஞ்சத்தின் அரிய புகைப்படங்களை பூமிக்கு அனுப்பிய ஜேம்ஸ் வெப் சமீபத்தில் 'ஜேம்ஸ் வெப்' தொலைநோக்கி பிரபஞ்சத்தின் அரிய புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வைத்திருந்தது.

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் முதல் முழு-வண்ண, உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்கள், முன்பை விட அதிக தூரம் பார்க்க வடிவமைக்கப்பட்டுள்ளன, இது வானியல் ஆய்வின் புதிய சகாப்தத்தை குறிக்கும் மைல்கல் என்று நாசாவால் பாராட்டப்பட்டது.

james-webb-space-telescope-nasa

வியாழனின் புதிய புகைப்படம்

சமீபத்தில்  ‘ஜேம்ஸ் வெப்’ தொலைநோக்கி வியாழனின் புதிய படங்களை கைப்பற்றி பூமிக்கு அனுப்பி வைத்தது.

இது குறித்து நாசா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது.அந்த பதிவில், வியாழனின் புதிய வலைப் படங்கள், அதன் கொந்தளிப்பான பெரிய சிவப்புப் புள்ளி (இங்கே வெள்ளை நிறத்தில் காட்டப்பட்டுள்ளது) உள்ளிட்ட கோளின் அம்சங்களை அற்புதமான விவரங்களில் எடுத்துக்காட்டுகின்றன என்று பதிவிட்டது.  

james-webb-space-telescope-nasa

கார்பன் டை ஆக்சைடை கண்டுபிடிப்பு

‘ஜேம்ஸ் வெப்’ தொலைநோக்கி ராட்சத கிரகத்தின் வளிமண்டலத்தில்  கார்பன் டை ஆக்சைடை வாயுவை கண்டறிந்துள்ளது, புறக்கோள் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு இருப்பதற்கான முதன் முதலாக மறுக்க முடியாத சான்று கிடைத்துள்ளது. இதனால், விஞ்ஞானிகள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.