வியாழனின் அழகிய புதிய படங்களை பூமிக்கு அனுப்பிய ‘ஜேம்ஸ் வெப்’ - விஞ்ஞானிகள் மகிழ்ச்சி
சமீபத்தில் 'ஜேம்ஸ் வெப்' தொலைநோக்கி பிரபஞ்சத்தின் அரிய புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வைத்திருந்தது. இதனையடுத்து, தற்போது வியாழனின் புதிய புகைப்படத்தை கைப்பற்றியுள்ளது. இதனால் நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஜேம்ஸ் வெப்
ஐரோப்பிய மற்றும் கனடா விண்வெளி மையங்களுடன் இணைந்து விண்வெளியை ஆய்வு செய்வதற்காக தொலைநோக்கி ஒன்றை நாசா உருவாக்கி இருக்கிறது. இந்த தொலைநோக்கிற்கு 'ஜேம்ஸ் வெப்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த தொலை நோக்கி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரஞ்ச் கயானாவிலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. மொத்தமாக 5 ராக்கெட்டுகள் உதவியுடன் விண்ணில் இந்த தொலைநோக்கி ஏவப்பட்டது. இந்த தொலைநோக்கி சூரியனை சுற்றிய புவி வட்டப்பாதையில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

பிரபஞ்சத்தின் அரிய புகைப்படங்களை பூமிக்கு அனுப்பிய ஜேம்ஸ் வெப்
சமீபத்தில் 'ஜேம்ஸ் வெப்' தொலைநோக்கி பிரபஞ்சத்தின் அரிய புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வைத்திருந்தது.
பூமியில் இருந்து 8 ஆயிரத்து 500 ஓளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கரீனா நிபுலா பிரபஞ்சம், 1,150 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஸ்பெக்டர்ம் பிரபஞ்சம், 2 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள சதர்ன் ரிங் நிபுலா பிரபஞ்சம், 290 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஸ்டீபன்ஸ் குவாண்ட் எனப்படும் 5 விண்மீன்களின் தொகுப்பு ஆகிய பிரபஞ்சத்தின் புகைப்படங்களை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பூமிக்கு அனுப்பி வைத்தது.
ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் முதல் முழு-வண்ண, உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்கள், முன்பை விட அதிக தூரம் பார்க்க வடிவமைக்கப்பட்டுள்ளன, இது வானியல் ஆய்வின் புதிய சகாப்தத்தை குறிக்கும் மைல்கல் என்று நாசாவால் பாராட்டப்பட்டது.
1/ Let's talk #Webb & #Hubble #BFFinSpace Here's Carina Nebula's "Cosmic Cliffs" captured by Webb. Webb has uncovered baby stars, previously hiding behind these immense clouds of gas & dust. These young stars give astronomers a rare insight into their early stages of formation pic.twitter.com/2xMoP3UPAO
— ESA Webb Telescope (@ESA_Webb) August 17, 2022
வியாழனின் புதிய புகைப்படம்
தற்போது, ‘ஜேம்ஸ் வெப்’ தொலைநோக்கி வியாழனின் புதிய படங்களை கைப்பற்றியுள்ளது.
இந்த புதிய புகைப்படங்கள் வியாழனின் வடக்கு மற்றும் தெற்கு துருவங்களுக்கு மேலே உயரமான உயரத்திற்கு செல்லும்போது, புலப்படும் அரோராக்களைக் கொண்டுள்ளது. தற்போது இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்து நாசா தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த பதிவில், வியாழனின் புதிய வலைப் படங்கள், அதன் கொந்தளிப்பான பெரிய சிவப்புப் புள்ளி (இங்கே வெள்ளை நிறத்தில் காட்டப்பட்டுள்ளது) உள்ளிட்ட கோளின் அம்சங்களை அற்புதமான விவரங்களில் எடுத்துக்காட்டுகின்றன. இந்த படங்களை குடிமக்கள் விஞ்ஞானி ஜூடி ஷ்மிட் செயலாக்கினார் என்று பதிவிட்டுள்ளது.
#Webb has captured new images of #Jupiter! The new observations feature visible auroras that extend to high altitudes above Jupiter's northern and southern poles. Explore the new images here: https://t.co/mn366GZ6BQ pic.twitter.com/3VX2baw5gJ
— ESA Webb Telescope (@ESA_Webb) August 22, 2022
1. Make way for the king of the solar system! ?
— NASA Webb Telescope (@NASAWebb) August 22, 2022
New Webb images of Jupiter highlight the planet's features, including its turbulent Great Red Spot (shown in white here), in amazing detail. These images were processed by citizen scientist Judy Schmidt: https://t.co/gwxZOitCE3 pic.twitter.com/saz0u61kJG