ரத்த தானம் மூலம் 2.4 மில்லியன் குழந்தைகள்..உயிரிழந்த ஜேம்ஸ் ஹாரிசன் - யார் இவர்?
2.4 மில்லியன் குழந்தைகளைக் காப்பாற்றிய ஜேம்ஸ் ஹாரிசன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் வசித்து வந்தவர் ஜேம்ஸ் ஹாரிசன். 81 வயதான இவர் கடந்த 64 வருடமாக பிளாஸ்மா தானம் செய்து வருகிறார். இதற்கான காரணம் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். முதலில், தாயின் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு ஆண்டி-டி பிளாஸ்மா அவசியமானது.
இது இல்லாதபோது, குழந்தைகளுக்கு ரீசஸ் நோய் ஏற்பட்டு மூளையைக் கடுமையாகப் பாதிக்கவும், இதயம் செயலிழப்பு அல்லது மரணம் வரை மிகக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த ஆண்டி-டி பிளாஸ்மா வெகு சிலரின் ரத்தத்தில் மட்டுமே காணப்படும். அதில் ஜேம்ஸ் ஹாரிசன் ஒருவர் ஆவார்.
ஜேம்ஸ் ஹாரிசன்
ஜேம்ஸ் ஹாரிசன் சிறுவனாக இருக்கும் போது ஒருவருக்கு விபத்து ஏற்பட்டு அவரது உயிரைக் காப்பாற்ற ரத்தம் தேவைப்பட்டது. அப்போது ஜேம்ஸ் ஹாரிசன் ரத்த தானம் கொடுத்து அவரது உயிரைக் காத்துள்ளனர். இந்த சம்பவத்தின் மூலம் ரத்த தானம் செய்ய வேண்டும் என முடிவெடுத்துள்ளார்.
கடந்த 64 ஆண்டுகளாக ரத்த தானம் செய்துவந்திருக்கிறார். அப்படி 2.4 மில்லியன் குழந்தைகளின் உயிரை இதுவரை காப்பாற்றி உள்ளார். இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக ஜேம்ஸ் ஹாரிசன் (81) காலமானார்.இவரது இறப்பு அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.