ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் கொரோனவால் உயிரிழப்பு
ஜேம்ஸ் பாண்ட் படங்களின் ஸ்டண்ட் இயக்குனர் கொரோனா நோயால் உயிரிழந்துள்ளார். ஜேம்ஸ் பாண்ட் படத்தின் சீரிஸ்க்காக ஒரு ரசிகர் பட்டாளமே வெறிபிடித்து காத்திருக்கும். அந்த வகையில் குறிப்பாக அந்த படத்தின் ஸ்டண்ட் கட்சியால் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. தற்போது இந்த படத்தின் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றி வந்தவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நடிகர் ரெமி ஜூலியன். இவர் 6 ஜேம்ஸ் பாண்ட் படங்களில் ஸ்டண்ட்மேனாக பணியாற்றி உள்ளார். இதுதவிர 1,400க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் டி.வி. விளம்பரங்களிலும் நடித்துள்ளார். 90 வயது முதிர்ந்த பழம்பெரும் நடிகரான அவருக்கு நடப்பு ஆண்டு ஜனவரி தொடக்கத்தில் உடல்நல குறைவு ஏற்பட்டது.
இதனால் மொன்டார்கிஸ் நகரில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் காலமானார். இதனை அவரது நண்பர் மற்றும் எம்.பி.யான ஜீன் பியரி டோர் உறுதி செய்துள்ளார்.