டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வு பெறுகிறாரா ஜேம்ஸ் ஆண்டர்சன்?
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் நடப்பு டெஸ்ட் தொடர் முடிந்த உடன் ஓய்வு பெற அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் மிக அற்புதமாக பந்துவீசி 13 விக்கெட்டுகளை தன் கைவசம் வைத்துள்ளார்.
39 வயதான நிலையிலும் இந்திய அணிக்கு எதிராக தன்னுடைய சிறப்பான பந்துவீச்சை இந்த நடப்புத் தொடரில் வெளிப்படுத்தி வருகிறார்.
இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற உள்ளது.
ஒரு போட்டி ஓவல் மைதானத்திலும் அதற்கு அடுத்த போட்டி ஓல்ட் டிராஃபார்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஓவல் மைதானத்தில் மிக சிறப்பாக விளையாடி இறுதியாக அவருடைய சொந்த மைதானமான ஓல்ட் டிராஃபார்ட் மைதானத்தில் தனது ஊர் ரசிகர்கள் முன்னிலையில் தன்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியை ஜேம்ஸ் ஆண்டர்சன் விளையாட அதிக வாய்ப்பு உள்ளதாக எனக்கு உள்மனதில் தோன்றுகிறது என்று தற்போது ஸ்டீவ் ஹார்மிசன் சமீபத்தில் கூறியுள்ளார்.
மேலும் இந்த ஆஷஸ் டெஸ்ட் தொடர் உறுதியாக நடைபெறுமா என்பது சந்தேகமே, அப்படி நடைபெற்றாலும் நிச்சயமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் இதில் விளையாடி அதன் பின்னர் அடுத்த ஆண்டு கோடை காலம் வரை காத்திருந்து விளையாடி தன்னுடைய சர்வதேச டெஸ்ட் தொடரை இங்கிலாந்தில் முடித்துக் கொள்வார் என்று எதிர்பார்க்க முடியாது.
என்னைப் பொறுத்தவரையில் அவர் ஓய்வு எடுத்துக்கொள்ள இதுதான் சரியான சமயம் என்றும், குறிப்பாக கடைசி டெஸ்ட் போட்டியில் விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்றி அவர் தன்னுடைய டெஸ்ட் கேரியரை முடிந்தால் இன்னும் அற்புதமாக இருக்கும் என்றும் சற்று சிரிப்பு பொங்க ஸ்டீவ் ஹார்மிசன் தற்போது கூறியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்காக 165 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன் இதுவரை 630 விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.
இதுவரை 3 முறை 10 விக்கெட் ஹால், 31 முறை 5 விக்கெட் ஹால் மற்றும் 28 முறை 4 விக்கெட் ஹால் கைப்பற்றி உள்ளார். டிஸ்டிக் கேரியரில் அவருடைய எக்கானமி 2.82 மற்றும் ஆவெரேஜ் 26.52 என்பது குறிப்பிடத்தக்கது.