கோவை கார் வெடி விபத்து : குற்றவாளிகள் , மூளை சலவை செய்யப்பட்டுள்ளனர்
கோவை வெடி விபத்தில் இறந்த முபினாக இருக்கட்டும், கைது செய்யப்பட்ட நபர்களாக இருக்கட்டும், அவர்கள் எந்த ஜமாத்துடனுடம் தொடர்பில் இல்லை என கோவை மாவட்ட ஜமாத் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை குண்டு வெடிப்பு
கோவை கார் வெடி விபத்து சம்பவத்தையடுத்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்தநிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து ஜமாத் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் காவல் துறை , வருவாய்துறை உயர் அதிகாரிகளும் கோவையில் உள்ள அனைத்து ஜமாத் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
அமைதி பேச்சுவார்த்தைக்கு பின் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் இனாயத்துல்லா செய்தியாளர்களை சந்தித்தார்.
மூளை சலவை
அப்போது எந்த தீவிரவாத்திற்க்கு துணை போக மாட்டோம் எனவும்,நடந்த சம்பவத்தைக் வன்மையாக கண்டிக்கிறோம் என தெரிவித்தார்.
இறந்த முபினாக இருக்கட்டும், கைது செய்யப்பட்ட நபர்களாக இருக்கட்டும், அவர்கள் எந்த ஜமாத்துடனுடம் தொடர்பில் இல்லை என கூறினார்.
பயங்கவாத செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை காவல்துறை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
கோவையில் இதுபோன்று சந்தேகப்படும் நபர்கள் இருக்கிறார்களா என அறிந்து ஜமாத்துகள் அந்தந்த காவல்நிலையத்தோடு தொடர்பு கொண்டு அவர்களைக் அடையாளம் கண்டு அவர்களைக் நேர்வழிபடுத்த முயலுவோம் என ஜமாத் நிர்வாகிகள் தெரிவித்தார்.