திருச்சி ஜல்லிக்கட்டு - காளை முட்டி பார்வையாளர் ஒருவர் பரிதாப பலி
bull
excitement
jallikkattu
By Nandhini
திருச்சி நாவலூர்குட்டபட்டு கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டி ஒருவர் உயிரிழந்திருக்கிறார். பொங்கல் திருவிழாவையொட்டி, திருச்சி அருகே உள்ள நவலூர் குட்டப்பட்டு என்னும் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 300 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் களமிறங்கி இருக்கிறார்கள். இந்நிலையில், இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண சென்றிருந்த பார்வையாளர் வினோத் என்பவரை காளை முட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியின் போது இதுவரை 26 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.