அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் தெறிக்க விட்ட காளை: வீடியோ காட்சிகள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சுமார் 5 நிமிடத்திற்கு மேல், வாடி வாசலில் ஒருத்தரை நெருங்கவிடாமல் கெத்து காடடிய காளையின் வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழர்களின் பாரம்பரிய வீரம்மிக்க விளையாட்டுகளில், ஜல்லிக்கட்டும் ஒன்று, குறிப்பாக தமிழகத்தின் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மிகவும் பிரபலம்.
உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த ஜல்லிக்கட்டை பார்க்க வருவார்கள், ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை பார்க்க முடியவில்லை.
இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளை ஒன்று சுமார் 5 நிமிடம் வாடி வாசலை நெருங்காவிடாமல், காளையர்களை கதிகலங்க வைத்த வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
A brave bull belongs to Karthikeyan unleashed in the #Alanganallur #Jallikattu arena for more than 5 minutes. It did not allow any tamers to touch him. @xpresstn @VinodhArulappan pic.twitter.com/WmbS0DKaUN
— jeyalakshmi (@jeyahirthi) January 16, 2021