ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி.!

rahul jallikattu madurai
By Jon Jan 12, 2021 07:41 AM GMT
Report

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள தமிழகம் வருகிறார் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டில் கலந்த்கொள்ளும் ராகுல் காந்தி பொங்கல் பண்டிகையை கொண்டாடவும் தமிழகம் வருகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற மூன்று மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கு தயாராகி வருகின்றன. இந்த நிலையில் ராகுல் காந்தியின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

திமுக - காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தைகளும் முடிவுறாத நிலையில் இந்த பயணத்தின்போது அது குறித்தும் விவாதிக்கப்படலாம் எனச் சொல்லப்படுகிறது.