நாங்க ஜல்லிக்கட்டு பார்க்க வரலாமா : தமிழக அரசிடம் அனுமதி கேட்ட நீதிபதிகள்

By Irumporai Dec 01, 2022 11:10 AM GMT
Report

ஜல்லிக்கட்டு போட்டியை காணவருமாறு உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தமிழக அரசு வக்கீல் அழைப்பு விடுத்துள்ளார்.

 ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு :

ஜல்லிகட்டு தொடர்பான வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் 4- வது நாளாக நடைபெற்று வருகிறது, அதனபடி இன்றைய விவாதத்தின் போது தமிழக அரசு தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர்.

அதில், ஒதுக்கப்பட்ட 100 மீட்டர் தூரத்தில் காளைகள் எப்படி ஓடி வெளியேறுகின்றன? 90 சதுட மீட்டர் குறுகிய இடத்தில் காளைகளை ஓட விடாமல் வீரர்கள் தடுக்கிறார்களா?

காளைகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள இடம், சென்று சேருடமிடம் தவிர ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளனவா?என பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்தனர்.  

 கேள்வி எழுப்பும் நீதிபதிகள் :

இதையடுத்து தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜல்லிக்கட்டு போட்டியின்போது தகுதியுடைய ஒரு வீரர் மட்டுமே ஒரு நேரத்தில் காளையை தொட முடியும் எனவும், இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்.

நாங்க ஜல்லிக்கட்டு பார்க்க வரலாமா : தமிழக அரசிடம் அனுமதி கேட்ட நீதிபதிகள் | Jallikattu Supreme Court Question

ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்க சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். 

ஜல்லிக்கட்டுபார்க்க வரலாமா :

 ஜல்லிக்கட்டு போட்டியின் பங்கேற்கும் வீரர்கள் அவரவரின் இடங்களில் தான் நிற்க வேண்டும் என்றும் காளைகள் வெளியேறும் பாதையை அடைக்க அனுமதி இல்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.

மேலும் தேவைப்பட்டால் நீதிபதிகளின் கேள்விகள் தொடர்பாக விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய தயாராக உள்ளதாகவும், தமிழக அரசு எதையும் மறைக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி ரிஷிகேஷ் ராய், ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்கு இந்த சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு நீதிபதிகளை அழைக்க மாட்டீர்களா? என்று கேட்டார்.

அதற்கு, நீதிபதிகளை அழைப்பதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி என்று தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.