சாதி மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது ஜல்லிக்கட்டு : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்
சாதி மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது ஜல்லிக்கட்டு என உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு தனது வாதத்தை வலிமையாக எடுத்து வைத்துள்ளது. கடந்த விசாரணை யின்போது, நீதிபதிகள் ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரடியாக காண அழைப்பு விடுத்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பான வாதங்களை தமிழகஅரசு முன் வைத்துள்ளது.
இன்று மீண்டும் விசாரணை
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்ய விலங்குகள் நல அமைப்பான பீட்டா மீண்டும் முயற்சித்து வருகிறது கடந்த சில வாரங்களாக வழக்கு நடந்து வந்த நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
தமிழர்களின் கலாச்சாரம்
இன்றைய விசாரணையில் தமிழகஅரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரு மாநிலத்தின் கலாசாரத்தை காப்பது அந்ததந்த அரசுகளின் கடமை என கூறியதுடன், ஜல்லிக்கட்டு என்ற தமிழர்களின் கலாசாரத்தை காப்பது அரசின் கடமை மட்டுமல்ல பொறுப்பும் கூட .
சாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது ஜல்லிக்கட்டு, இது தமிழர்களின் கலாசார அடையாளம் என்பதால் பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஜல்லிக்கட்டை காண வருகின்றனர் என்று தனது தரப்பு வாதங்களை ஆணித்தரமாக வைத்துள்ளது.